Adhyatmadeepam Upanyasam in Tamil by Sri Nochur Venkatraman

From 10.12.2017 to 14.12.2017

at Vedabhavan

 


2 Comments

Muthu Aiyer · December 11, 2017 at 6:50 am

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்நி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அக்நியின் குணம் எல்லாவற்றையும் பஸ்மமாக்குவது. எல்லாவற்றையும் என்றால் தீய குணங்களை பஸ்மமாக்குவதும், நல்லனவற்றைத் தன்னுள் வாங்கிக் கொள்வதுமாகும். பஸ்மமாக்குவது என்றால் நம்முள்ளிருக்கும் காமம், க்ரோதம்,ஆணவம் என்பதை பஸ்மமாக்கி பின் அந்த நிலையை எய்திய நம்மை தன்னுள் வாங்கிக் கொண்டு நமக்கு அடைக்கலம் தரும் குணம் அக்நியின் குணம். ஆகையால், திருவண்ணாமலை எனும் திவ்ய க்ஷேத்ரத்தை நினைத்தாலே மேற்சொல்லப்பட்ட துர்க்குணங்களை பஸ்மம் செய்து, நம்மை முக்திபெறச் செய்யும் ஸ்தலம் திருவண்ணாமலை. அண்ணாமலை அதாவது அண்ணந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் இங்கு தெரிவது சிவ ஸ்வரூபம் அந்த மலையில். சிவனார் விஸ்வரூபம் எடுத்த இடம். அடி, முடி காண இயலாத உருவம். அப்படிப்பட்ட இந்த புனித ஸ்தலத்தை மனதால் நினைத்தாலே நம்மை ஆட்கொண்டு முக்திநல்கும் சிவம் அண்ணாமலையார் இங்கு வீற்றிருக்கிறார். அமாவாசை என்பது எங்கும் இருள் சூழ்ந்து நம்மை நடுநடுங்கச் செய்து நம் உடலை உஷ்ணிக்கச் செய்யும் நாள். பௌர்ணமி சஞ்சலமிகுந்த நம் மனதை குளிரச் செய்து சாந்தமாய் அந்தப் பரம்பொருளை எண்ண ஏதுவான நிலை ஏற்படுத்தும் நாள். ஆகவே, அந்த சாந்த, சத்வகுணம் நல்கச் செய்யும் அந்த நன் நாளில் அண்ணாமலையாரின் கிரியை/மலையை வலம் வந்தால் நம் மனது ஒருமித்து சிவனேயென்றாகும் நிலையில் நமக்கு முக்தியைக் கொடுக்கும் நாள் என்பதால் பௌர்ணமியில் கிரிவலம் வருவது இந்த அண்ணாமலையில் மிகவும் விசேஷம். விஞ்ஞான பூர்வமாகவும் அந்த மலையைச் சூழ்ந்துள்ள மருத்துவ குணமிக்க தாவரங்களின் சுவாசிப்பால், அங்கு உரைந்துள்ள சித்தர்களின் ஆசிகளாலும், கிரிவலத்தின்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி அடையைச் செய்து உரிய காலத்தில் நமக்கு முக்திபெற வழிவுகுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. அந்த மகா புண்ய க்ஷேத்ரத்தின் மைந்தர், ஸ்ரீ ரமண மஹரிஷியின் ஆசி பெற்ற ஸ்ரீ (Nochur) வெங்க்கட்ராமன் என்ற அருளாளரின் சொற்பொழிவு கேட்காத செவியும் ஒரு செவியோ. எனது விண்ணப்பம் என்னவென்றால் இந்த மாகாணத்தின் தெலுங்கு பாஷை எனக்கு அதிக பரிச்சயமில்லை என்பதால் சொற்பொழிவு நடக்கும் இடத்தை கூகுள் வரை படத்தில் சுட்டிக்காட்டி பிரசுரித்திருந்தால் என்னைப் போன்ற பக்தர்களுக்கு மிகவும் உதவியாயிருந்திருக்கும். நன்றி.

Varadarsjan · December 12, 2017 at 4:47 pm

Sri Ramanakendram is available on Google map. Type in just- Sri Ramanakendram on your phone and it is shown on the Shivam road. .

Leave a Reply

Your email address will not be published.