பொங்கல்:
தை மாதம் முதல் நாள் பொங்கல். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யும் உத்தராயண காலம். ஸூரிய தேவன் சிவனின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவர்.பரமேஸ்வரனுக்கும், பராசக்திக்கும், மஹா விஷ்ணூவிற்கும் வலது கண்ணாய் உள்ளவர்.
உலகத்தில் மழை, பனி, வெப்பம். ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால் உண்டாகிறது. சூரியனும் சந்திரனும் ப்ரத்யக்ஷ தேவதைகள் .சூரியனின்ரதத்திற்கு ஒரு சக்கிரம். பன்னிரண்டு ஆரக்கால்கள்.
வேதத்தின் ஏழு சந்தஸ்களும் தேரின் ஏழு குதிரைகள். இந்த குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும் பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும்குறிக்கின்றன.
சூரியனின் ரதத்தில் வால்கில்யர் எனப்படும் விரலளவே உள்ள அறுபது ஆயிரம் ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். இது 60 நாழிகைகளை குறிக்கும்.சூரியனின் மேல் சக்கிர பாகம் உத்திராயணத்தையும்
கீழ் பாகம் தக்ஷிணாயனத்தையும் குறிக்கும். இம்மாதிரி கால ஸ்வரூபமாகவும் வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன் ப்ருஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியமும்மூர்த்திகளின் ஸ்வரூபம்.
முறையாக இன்று இவரை பூஜிப்பதாலும், சூரிய நமஸ்காரம் செய்வதாலும் ஆதித்ய ஹ்ருதயம் போன்றவற்றை படிப்ப தாலும் நல்ல உடல் வலிமை, நீண்ட ஆயுள், மனஸ் சாந்தி முதலியன கிட்டும்.
தம்பதிகளாக ஸத் குரு மூலம் இன்று ஸூர்ய நமஸ்கார மந்திர ஜபம் உபதேசம் பெற சிறந்த நாளாகும்.
ஸ்வேத வராஹ கல்ப ஆரம்பத்தில் விராட் புருஷனின் கண்ணிலிருந்து ஸூர்யன் தோன்றினார் என்கிறது புருஷ ஸூக்தம். வைவஸ்வத மந்வந்தரத்தில்ஸூர்யன்கஷ்யபரிடமிருந்து அவதரித்தார் என்கிறது.
புராணங்கள் ஸூர்யனின் கோடி கணக்கான கிரணங்களில் சில கிரணங்கள் மழையையும், ப்ராணிகளுக்கு ஜீவ சக்தியையும்அளிக்கிறது., வியாதியையும் அகற்றிஉடலை வளர்க்கிறது. உலகை பீடிக்கும் கெட்ட தன்மையையும் அழிக்கிறது.
ஒவ்வொரு பொருளிலுமுள்ள அசுத்தத்தை அகற்றி சுத்தம் செய்கிறது. ஆசைகளையும் நிறைவேற்றுகின்றன. ஸூர்ய நமஸ்காரம் ஒரு மண்டலம் செய்தால் எல்லாநோய்களும் தீரும்.
பச்யேம சரதஸ்சதம் என்று கண் நோயை போக்குவதில் சூரிய கிரணத்திற்கு உள்ள சக்தியை வேதம் நமக்கு கூறுகிறது . மாத்யானிகத்தில் இதை கூறுமாறுஉபதேசிக்கிறது.
க்ருஷ்ணரின் புத்ரன் ஸாம்பனுக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகத்தை ஸாம்பன் ஸூர்ய நமஸ்கார பூஜை செய்து நீக்கி கொண்டதாக புராணம் கூறுகிறது.அகஸ்தியரிடம் ராமர்ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் பெற்று ராவணனை கொன்றான் என்கிறது ராமாயணம். சூரியன் ஸத்ராஜித்திற்கு ஸ்யமந்தக மணி கொடுத்தார் என்கிறது பாகவதம்.
ஸந்தியாவந்தன மந்த்ரம் மும்மூர்த்திகளின் வடிவம் சூர்யன் என்கிறது. சூர்ய மண்டலம் வழியாக துறவிகள் ப்ருஹ்ம லோகம் செல்கின்றனர். ஸூர்ய உபாசனையின் மூலம் அனைத்துநன்மைகளையும் பெற முடியும் என்று இதனால் தெரிகிறது.
14-1—2015
காலை சூரிய ஹோரையில் 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பொங்கல் பானை வைக்கலாம். சூரியனுக்கு பூஜையும் செய்யலாம்.
14-1-2015 சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை.
15-1-2015 மகர ஜ்யோதி (ஐயப்ப) தரிசனம்.
16-1-2015 கனுப்பொங்கல்—மாட்டு பொங்கல்.
பொங்கலன்று பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளை எடுத்து மூன்று அல்லது ஐந்து வயதான சுமங்கலி பெண்களிடம் தந்து நெற்றி மற்றும் கன்னத்தில் மூன்றுமுறை தேய்த்து கொள்ள வேண்டும்..நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பொங்கலன்று இரவு சாதத்தில் கொஞ்சம் மஞ்சள்,மற்றும் குங்குமம் கலந்து தனி தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் ஒவ்வொரு வகையிலும்ஒவ்வொருவருக்கும் ஏழு அல்லது ஒன்பது உருண்டைகள் பிடித்து வைத்து கொள்ளவும்.
பொங்கலுக்கு மறு நாள் காலையில் சுமார் 5-40 மணிக்கு மேல் 6-40 மணிக்குள் கனுப்பிடி வைக்கலாம். திறந்த வெளியில் அல்லது மொட்டை மாடியில் கோலம் போட்டுசெம்மண் இட்டு அதன் மேல் மஞ்சள் இலை அல்லது வாழை இலை நுனி கிழக்கு முகமாக பரப்பி அதில் மூன்று ஒற்றை படை வரிசையில் 7அல்லது9 உருண்டைகள் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்குவாழைபழம், கரும்பு துண்டு வைத்து அக்ஷதை புஷ்பம் வைத்து
காக்கை பிடி கனுப்பிடி வைத்தேன் காக்காய்கெல்லாம் கல்யாணம் என்று சொல்லி கற்பூரம் ஏற்றி நமஸ்கரித்து பிறகு ஸ்நானம் செய்து புது வஸ்திரம் தரித்துகொள்ள வேண்டும். பிறந்த வீடு செழிக்கவும் தனது
ஸ்ஹோதரன் நீடூழி வாழவும் பெண்கள் இதை செய்கிறார்கள். இன்று யமதர்ம ராஜா காக்கை வேஷமிட்டு வந்து சாப்பிடுவதாக ஐதீகம்.
இன்று பசுவை பூஜை செய்ய வேண்டும்.பொங்கல் வைத்து பசுவை சாப்பிட செய்ய வேண்டும். பசு மாட்டுக்கு புல் கொடுக்கும் போது சொல்ல கூடிய ஸ்லோகம்.
ஸெளரபேய: ஸர்வ ஹிதா: ஸர்வ பாப ப்ரணாசிந:
ப்ரதிக் ருஹ்ணந்து மேக்ராஸம் காவ : த்ரைலோக்ய மாதர:
பத்து மணிக்கு குரு ஹோரையில் பசு மாடு பூஜை செய்யலாம்.
Contributed by Sri Gopalan Krishnan
0 Comments