போகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼ என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். போகம் என்றால் ஆனந்தம் . ஆனந்த்த்தை வெளிப்படுத்தும் தருணம் இதே ‼ எவ்வித ஆனந்தம் , முப்பதும் தப்பாது பாவை பாடி , பறை பெற்றோமே , அதுவும் நாரயணன் தந்த்து , மேலும் அவனேயே பறையாக / பரிசாக பெற்ற ஆனந்தம் அதை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தருணமிதே ஐயா‼ பரந்தாமனயே பறையாக பெற்ற பாக்யலக்ஷ்மிகளான நாமே கோபிகள்தானே . அவனை அவனால் அவன்பொருட்டு தர வல்லான் அவனின்றி வேறு யாரால் முடியும் .” நாராயணனே நமக்கே பறை தருவான் ” இப்பறையை அவனே தரவேண்டும் ,அதுவும் அவனயே தரவேண்டும் சாத்யமா இது ? சாத்யந்தான் பூர்வாதாரத்தில் நடந்த்து அறிந்தே கேட்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் கனையாழியை காட்டி, சூடாமணியை பெற்று, அய்யன் ஆர்யனிடம் கொடுத்த அனுமனிடம் ” ந குருமி ஸத்ருசம் ப்ரியம் ” எனப்பகர்ந்து தன்னையே தந்தானல்லவா அவன்தானே இவனும் , ஏகபத்னி விரதன் என சங்கல்பித்து பாவையர் யாரையும் பாரேன் என்று பாராமுகமாயிருந்தவனை பிடித்திழுத்து, எங்களுக்காக ஓர் அவதாரம் வேண்டுமென விண்ணப்பித்து, கருணை கூர்ந்து கண்ணனாய் வந்தவனை பாவையர் புடை சூழ்ந்து “இற்றேழ் பிறவிக்கும் உமக்கேயாட்பட்டோம் மற்றவை காமங்கள் மாற்று ” என பாவை பாடி பறை பெற்ற போகம். இது போகிகளுக்கான பண்டிகை தானே ‼‼ எப்போதுமே எடுத்த பொருளை அதனிடத்திலேயே வைத்தால் , அதைவிட ஆனந்தம் ஏது ‼ ஆம் நாமெல்லாம் இடம் மாற்றி வைக்கபட்ட பொருட்கள் . நம்மை ச்சேர்க்க வேண்டிய இடத்தில் , சரியான சமயத்தில் சேர்த்து விட குருநாதர் என்றொருவர் வேண்டும். கேசவனை பாடியும் கேட்டு நீ கிடத்தியோ என்றதட்டும் ஆண்டாளைப்போல ,, எண்ணம் , சொல் , செயல் இம்மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர் வழி நடக்க ,, எதை எண்ண வேண்டும் , எதைப்பேச வேண்டும் , என்பதும் வல்லிய எண்ணமும், இன் சொல்லிற்குமான செயல் வேறாகுமா என்ன “வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணநம்பியின் கைத்தலம் பற்ற கனாக்கன்டு நினைவிலும் அதே ச்சிந்தனை கொண்டு, ரங்கமன்னாரின் அரங்கமடைந்த ஆண்டாளே நம் குரு. அக்ஞான திமிர ஹரண ; ஸுக்ஞான தீப்ப்பரகாச ,, பிரக்ஞான போதகன என்றபடி மனமெல்லாம் மாதவனே கொண்டு அவனை அடைய அவள் காட்டிய வழியில் சென்று பாடி பறை பெற்று, போகமடைந்து போகியாகுவோமாக
– ஸ்ரீமதி ஜயஸ்ரீ ராமன்
0 Comments