vedaparameswaraஹர நாம மஹிமை
ஸ்ரீ ஸ்ரீதர ஐயவாள் அவர்களின் ஹரநாம மஹிம்நா ஸ்த்வத்தில் உள்ள கதை!

பகவன்நாமா என்பது நாம் கார்யார்த்தமாகவோ,ஹேளனமாகவோ, பரிஹாசமாகவோ, வெறுப்புடனோ சொன்னால் கூட அதன் பலன் லவலேசமும் குறைவதில்லை!அதனால் தான் மஹான்கள் நீ எந்த கார்யம் செய்தாலும் பகவத் ஸ்மரணத்துடன் செய்!என வலியுறுத்தினர் நாமி கொடுக்காத பலனை நாமம் தருமென நாம மஹிமையை உயர தூக்கி காட்டினர்.

ஒரு வேடன் தன் குலத்தொழிலான வேட்டுவத்தை விடாமல் செய்துவந்தான். இறுதி காலம் வந்து விட்டது! அவன் மகன் இளையவன் இனி நான் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவேன் தந்தையே! என அங்கலாய்க்க,வேடனோ அவனை கையமர்த்தி,

ப்ரஹர, ஸம்ஹர,ஆஹர! என்று சொல்லிமுடிக்கும் போது உயிர் பிரிந்தது! யமதூதர்கள் வந்து அந்த வேடனின் ஜீவன பற்ற வந்தனர்,அதற்குள் சிவகணங்கள் இந்த ஜீவனை தொடாதே எம்பெருமானார் கட்டளை என்றனர். ஐயா! இவன் மஹாபாபி! வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தி ஹிம்ஸை செய்து,வேட்டையாடி கொன்றவன் இவனுக்கு சிவபதம் அருள வழியில்லை என்றனர். சிவ கணங்களும் இறுதியாக ஹர நாமம் சொன்னதால் சிவபதம் அழைத்துவர உத்தரவு என்றனர்!

ஐயன்மிர் ஆசுதோஷியான சிவபெருமான் தன் நாமம் ஜபிக்கப்பட்டதாக எண்ணி அருளுகிறார்! உண்மை இவன் தன் குலத்தொழிலைத்தானே மகனுக்கு கற்பித்தான்! அதில் எம்பெருமான் நாமம் வரவில்லையே!

ஹே தர்மராஜதிபதே! அவன் கடைச்சொல் எண்ணவோ?

சிவசரணர்களே! ப்ரஹர பார்த்து அடித்து ஸம்ஹர கொன்று ஆஹர கொண்டுவா இது தானே இந்த பாபியின் வாயில் வரும்.

ஹேதர்மரக்ஷணவாந்!

இனி இந்த ஜீவனை பாபி எனச்சொல்லாதீர்கள்! நீலகண்டரான பெருமானார்,அவன் தொழில் நிமித்தம் சொன்ன சொற்களில் ப்ர,ஸம்,ஆ இவைகளை நீக்கி விட்டு சொல்லப்பட்ட மூன்று ஹரநாமாக்களில் ஒன்றின் பலனாக சிவ சாயுஜ்யத்தை கொடுத்துவிட்டு,இன்னும் இரண்டு நாமாக்களுக்கு என்ன செய்வதென்று கவலையுடனிருக்கிறார் என்றனர். யமதூதர்கள் பரமேச்வரினின் கருணையை எண்ணி கண்ணீர் சொரிந்து,அந்த வேட்டுவ ஜீவனை சிவசாயுஜ்யத்திற்கு அனுப்பிவைத்து, அவரின் நாமத்தை பெரிதாக கோஷித்தனர்

ஹர ஹர மஹாதேவ!
சிவ சிவ மஹாதேவ!
ஹர சிவ மஹாதேவ!
சிவ ஹர மஹாதேவ!

என்று ஸ்ருதியோடு கானம் செய்தபடி திரும்பி ச்சென்றனர்.
இங்கே நாமே சிவ சாயுஜ்யத்தை தந்து விட்டது கண்டீர்களா
!
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

— ஸ்ரீமதி ஜயஸ்ரீ ராமன் —

 

Categories: Articles

1 Comment

Bhavani.S · December 31, 2014 at 11:41 am

Namathin mahimai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *