facebook_1801483568[1]

மாசி மாதம் க்ரு‌ஷ்ண பக்ஷம் சதுர்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி.

கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மஹாலிங்கமாக இன்று தான் முதன்முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம்.

சிவபெருமானின் அடி முடி காண முடியாது நான்முகன் திகைத்த நாள். சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் குரு மூலம் உபதேசம் பெற—சிவ பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஹோமம் செய்து ஸித்தி பெ- சிறந்த நாள்.

ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது. உப்வாஸ ப்ரபாவேந பலாதபி ச ஜாக்ராத் சிவராத்ரே த்தா தஸ்யாம் லிங்கஸ்யாபி ப்ர்பூஜயா அக்ஷய்யான் லபதே போகான் சிவ ஸாயுஜ்யமாப்நுயாத்.

சிவராத்ரியன்று உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பதாலும் முயற்சியுடன் பகலிலும் இரவிலும் தூங்காமல் கண் விழிப்பதாலும் சிவ லிங்கத்தை பூஜை செய்வதாலும் குறைவற்ற அனைத்து யோகங்களும் அனுபவித்து விட்டு இறுதியில் சிவ லோகம் அடையலாம். சக்தியற்றவர்கள் பால் பழம் மட்டும் சாப்பிடலாம். சிவன் கோவிலில் சிவன் சன்னதியில் மண்ணாலான அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைக்கலாம்.

மஹா சிவராத்ரியன்று விபூதி தயாரிக்கும் முறை.

இன்று காலையில் நித்ய கர்மாக்களை முடித்துவிட்டு வீட்டின் நடுவிலோ அல்லது கொல்லை புறத்திலோ அல்லது திறந்த வெளியில் முன் சேகரித்து வைத்த நெல்பதர் (கருக்காய்)- பச்சரிசி தவிடு,உமி, வைக்கோல்

பசுமாட்டு காய்ந்த சாணி உருண்டைகள் .வரிசையாக அடுக்கி குவித்து விட வேண்டும். தினந்தோறும் பசு மாட்டு சாணியை சிறிய அளவில் தட்டையாக தட்டி வெய்யலில் காய வைக்க வேண்டும்

( ஊசி மூலம் பிறக்காமல் இயற்கையாகவே கரு தரித்து பிறந்த பசு மாட்டு சாணி கிடைத்தால் நல்லது).

பிறகு ஸ்வாமி சன்னிதியில் எரியும் தீபத்திலிருந்து கற்பூரம் ஏற்றிக்கொண்டு வந்து அதை ஹோமகுண்டத்தில் வைத்து அந்த அக்னியில் விரஜா ஹோமம் என்னும் தைத்தரீய உபநிஷத்திலுள்ள மந்திரங்களால்

அல்லது பஞ்சாக்ஷர மந்திரத்தால் பசு நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும்.

பிறகு இந்த அக்னியை குவித்து வைத்துள்ள சாணி உருன்டைகளில் போட்டு அது நன்கு எரிந்து ஸுமார் ஒரு நாள் முழுவதும் எரிந்து அதன் கறுப்பு நிறம் மாறி வெண்மையாக மாறும்..

அதை சலித்து சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதுவே விபூதி தயாரிக்கும் முறை. சிவனுக்கு இந்த வீபூதியை அபிஷேகம் செய்து விட்டு உபயோகிகலாம்.

Contributed by Sri Gopalan Krishnan


1 Comment

Rajaraman P K · February 16, 2015 at 9:28 am

Useful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *